கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையில் காசாவில் குறிப்பிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தான் வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தாக்குதலை தொடர்ந்து வருகிறார். ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் […]
பெயரூட் : ஒரு சில மாதங்களுக்கு முன் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்துச் சிதறி பெரும் பொருட்சேதங்களும், உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கு இஸ்ரேல் மௌனம் காத்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரதமர் நெதன்யாகுவின் இந்த பேச்சைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலைக் […]
டெல் அவீவ் : கடந்த வியாழன் அன்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றதை அடுத்து , லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போரை அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது. இதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். Read More- யாஹியா சின்வர் உயிரிழப்பு : கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்! குறிப்பாக, லெபனானில் இருந்து இன்று காலை இஸ்ரேலின் டெல் அவிவ் […]
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர் நடைபெற்று வருகிறது. அதிலும், சமீப நாட்களில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை அங்கு மேற்கொண்டு வந்தது. இதில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாங்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் ஹமாஸ் தலைவரான ‘யாஹ்யா சின்வர்’. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்து […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் […]
லெபனான் : கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமான் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இணைந்து இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேலை […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர்-7 ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்ப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இரான் ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கி வந்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொள்ளப்பட்ட்டனர். மேலும், மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 21 நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென […]
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், இஸ்ரேல் தரப்பில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும், ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேல் நாட்டினர் […]
Israel Hamas War : இஸ்ரேல் ஹமாஸ் போர் என்பது கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தற்போது வரை தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். காசா நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தாக்குதல்கள் முன்பை விட குறைந்தாலும், முழுதாக தாக்குதல்கள் குறையவில்லை. பல்வேறு உலக நாடுகள் , காசா நகர் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு […]
Israel : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது போர் தொடுத்து நூற்றுக்கணக்கானோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றது. இதில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா நகரில் போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய […]
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இஸ்ரேல் பிரதமருக்கு அவரது சொந்த நாட்டிலும் எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். சமீபத்தில் வடக்கு காசாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பயணம் மேற்கொண்டார். அவருடன் ராணுவ தலைமை தளபதிகளும் சென்றனர். காசாவில் ராணுவ வீரர்களை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேசினார். காசாவில் இருந்து திரும்பிய இஸ்ரேல் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “காஸா பகுதியில் ஹமாஸால் […]
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் போரின் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார காலம் போர் இடைநிறுத்தம் செய்யப்பட்டது, அப்போது இஸ்ரேலிய […]
காஸா பகுதியில் போர் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்து விட்டது. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், காசா மற்றும் இஸ்ரேலை சேர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் பலர் தங்களது இருப்பிடத்தை விட்டு அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர். இஸ்ரேல் மக்களை விட, காசா பகுதியில் உள்ள மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது பெற்றோர்கள் குழந்தைகள் என உறவுகளை இழந்து நிற்கின்றனர். இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு […]
இஸ்ரேலில் ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகு தனது பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேலில் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்று உள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தலைமையிலான லிக்குட் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் புதிய அரசு அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க பெஞ்சமின் நெதன்யாகுக்கு 28 நாள் […]
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகம் இடையே சுமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், கடந்த 1948 -ம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அனால் அதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்க மறுத்தது. மேலும், இஸ்ரேல் நாட்டு மக்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவும் தடை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கிடையே நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், பொருளாதாரம், தூதரகம் […]
ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பியதற்கு இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் […]