ஆஸ்திரேலிய கேரியர் குவாண்டாஸ் தனது முதல் நேரடி விமானத்தை பெங்களூருவிலிருந்து சிட்னிக்கு புதன்கிழமை இயக்கியது. தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் முதல் நேரடி விமானம் இதுவாகும்.பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து QF68 விமானம் மாலை 6:35 மணியளவில் புறப்படுகிது. இந்த விமானத்தின் பயண காலம் சுமார் 11 மணி நேரம் ஆகும்.முதல் நாளிலேயே இருக்கைகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.