பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. […]
பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன. “பருவமழை தொடர்ந்து நகரின் […]