பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அமர்ந்த இடத்திலிருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து விட்டதால்,எந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் பணத்தை அனுப்பி வீட்டுக்கு டெலிவரி செய்யும் படியாக வாங்கி கொள்கின்றனர். இது சிலருக்கு சவுகரியமாக இருப்பது போல ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் மிக சவுகரியமாக போய்விட்டது. […]