பெல்ஜியம்: கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷ்-ஐ தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை (Institute of Tropical Medicine in Antwerp, Belgium) சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் நிறுவன மவுத் வாஷை சோதனைக்கு உட்படுத்தினர். […]
பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தி அங்கீகரித்துள்ளது பெல்ஜியம் அரசு. அந்நாட்டு அரசு கடந்த வார வெள்ளிக்கிழமை இதனை அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் 93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவின் […]
Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில் பலருக்கு புதிய புதிய அரிய வகை நோய் இருப்பது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெல்ஜியத்தில் ஒருவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர் குடிபோதையில் […]
பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுள் ஒன்றான டாணா எனப்படும் பெண் சிங்கத்திற்கு காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை இருந்துள்ளது. பின்னர் சோதனை செய்ததில் இந்த பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கத்திற்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கங்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று […]
பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தற்பொழுது வரையிலும் இந்த வைரஸின் தாக்கம் குறையாத நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் பெல்ஜியத்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
பெல்ஜியத்தில் நேற்று சனிக்கிழமையோடு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்படி அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,014 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த […]
பெல்ஜியம் நாட்டில் உள்ள ப்ரசல்ஸ் என்ற நகரில் இன்று நுயிட் பிளாஞ்ச் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிலை செதுக்கும் கலைஞர்கள் சிலர் அங்குள்ள தேவாலயங்கள், நினைவு சதுக்கங்கள், பள்ளி விளையாட்டு அரங்குகளில் 20க்கு மேற்பட்ட சமகாலத்தை சேர்ந்த சிலைகளை வடிவமைத்து உள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு கால்வாய் அருகே, திமிங்கலம் ஒன்று காயங்களுடன் கரையொதுங்கி கிடப்பது போன்ற சிலையை கலைஞர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த சிலை, நிஜ திமிங்கலத்தை போல் தத்துருபமாக இருந்ததால், […]
பெல்ஜியம் ஹாக்கி அணிக்கும் , இந்தியா ஹாக்கி அணிக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் பெல்ஜியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில்நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. இப்போட்டியில் இரண்டாவது பாதியில் 39-வது நிமிடத்தில் மந்தீப் ஒரு கோலும், 54 -வது நிமிடத்தில் அக்ஷ்தீப்சிங் ஒரு கோலும் அடித்தனர்.இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய […]