ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.., கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம்..!

தமிழக அரசின் கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில்இன்று சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து புதிய துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா துறை கூடுதல் தலைமைச் செயலரான விக்ரம் கபூர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக … Read more

பீலா ராஜேஷ் தந்தை காலமானார்.!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். வெங்கடேசன் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி அவர்களின் கணவர் ஆவார். என்.எல் வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வழையடியை பூர்விகமாக கொண்டவர். சமீபத்தில் தான் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பித்ததக்கது.

#BREAKING : அதிகரிக்கும் பாதிப்பு ! 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி … Read more

பீலா ராஜேஷ் மாற்றத்திற்கு காரணம் என்ன ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ்  வணிகவரித்துறைச் செயலாளராக  மாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதில் ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.ஆனால் பீலா ராஜேஷ் மாற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் .சூழலை பொறுத்து உரிய நேரத்தில் … Read more

#BREAKING : சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் மாற்றம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ்.கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இது தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார்.ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு ஓன்று பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் … Read more

ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி … Read more

தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி .!

தமிழகத்தில்  நேற்றுவரை  1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு 1173 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் ,   குணமடைந்து வீடு திரும்பியோர்   எண்ணிக்கை 58 ஆக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,  தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா … Read more

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது . கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்குஇடையில்  பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் … Read more

பீலா ராஜேஷ் போல நடித்து அசத்தும் சிறுமி – வைரலாகும் வீடியோ

பீலா ராஜேஷால் ஒரு சிறுமி நடித்துக்காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உலகமே இன்று கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கிற்குள் முடங்கியுள்ளது.இதன் விளைவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் இருந்து அவர்களை பொழுதை கழித்து வருகின்றனர்.குறிப்பாக அதிகப்படியானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.  இதற்கு மத்தயில் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது கொரோனா குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  செய்தியாளர்களை சந்தித்து … Read more

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.! பீலா ராஜேஷ்.!

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 738லிருந்து 834 ஆக உயர்வு  என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை எனவும் , நேற்றைய விட இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார். அதன் படி நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக  நிலையில் இன்று மேலும் 6 … Read more