மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எனும் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக தேன் கூட்டின் மீது கல்லெறிந்து விளையாடியுள்ளனார். இதனை அடுத்து இந்த தேனீக்கள் கலைந்து அருகிலிருந்தவர்களை விரட்ட ஆரம்பித்துள்ளது. அப்பொழுது தேனீக்கள் கொட்டியதில் 75 வயது முத்து எனும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.