பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு. 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது. அதன்படி,குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது. மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் […]
பி.இ பி.டெக் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, https://www.tneaonline.org/ என்ற இணையத்தளத்தில் வரும் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த கல்வியாண்டில் காலியாகும் சூழல் உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கு வருகின்ற 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதனால், […]
தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் […]
பி.இ. மற்றும் பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியீடு. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக, கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, அதற்கான ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் […]
பி. இ., பி. டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளின் சேர விரும்பும் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. இ.,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடைய […]
B.E. மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு தேர்வுகளும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பின்னர் இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி எப்போது திறக்கப்படும் என்றும் தேர்வுகள் நடைபெறுமா? […]
பி.இ படித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவார்களாம். இன்ஜினியரிங் பட்டபடிப்பான பி.இ பட்டத்தை பெற்றவர்கள், இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியருக்கு உண்டான ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பங்கேற்கலாம். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியமர்த்தப்படுவார்கள். […]