ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966 இந்திய திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 1966-ம் வருடம் இதே நாளில் சென்னையில் பிறந்தார். இவருடைய அப்பா சேகர் மலையாள திரைப்படத் துறையில இசையமைப்பாளராக பணியாற்றியவர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் ஆகிய கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக்கொண்டார். தனது 11-வது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு […]