டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் […]