டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் […]
சென்னை : அருண் ஜெட்லீயின் மகனான ரோகன் ஜெட்லீ அடுத்த பிசிசிஐ செயலாளராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. கடந்த 4 வருடங்களாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே ஐசிசியின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. மேலும், கிரெக் பார்கலே இம்முறை தன்னை 3-வது தவணையாக ஐசிசி தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், அவரின் இந்த அறிவிப்பைத் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷா அடுத்த ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளர் ..! கடந்த 2019ம் ஆண்டில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளராக இருந்த ஜெய்ஷா அந்த பதவியிலிருந்து விலகினார். அதன் பின் அதே ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவர் பிசிசிஐ-யின் செயலாளராகப் பதவியேற்றது முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் எடுக்கும் சில அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பலரும் வரவேற்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக […]
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தகவல். ரஞ்சிக்கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன்படி லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் நாக்-அவுட் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 38 அணிகள் பங்குபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி […]