சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த […]
சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 16ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் (நவ.27ஆம் தேதி) புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் தற்பொழுது, நாகப்பட்டினத்திற்கு தெற்கே – தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இது தொடர்ந்து வடக்கு […]
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. ‘ஹமூன்’ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயல் நேற்று (24 ஆம் தேதி) தீவிர புயலாக மாறி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதனையடுத்து மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. […]
வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஹமூன் புயல் நேற்று காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை […]
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து தெற்கு – தென்கிழக்கு தோசையில் 600 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 690 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அடுத்த […]
டிச.19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதனால் டிச. 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் […]
நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் அறிவிப்பு. நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் எனவும் தகவல் கூறியுள்ளது. இதனிடையே, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை […]
வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் பெயர் வைக்கப்படுகிறது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய […]
வங்கக் கடலில் புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 8-ஆ தேதி அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக […]
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என […]
தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இந்த […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12-ம் தேதிக்குள் […]
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் தென் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுகிறது. தமிழகம் நோக்கி நகரும் என்பதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது […]