கொரோனா தடுப்பு பணிக்காக 2 கோடி நிதியுதவி வழங்கிய தெலுங்கு நடிகர்!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த நோயானது, தற்போது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து,இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக  பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகிற நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், இப்பணிக்காக ரூ.2 கோடி வாழங்கியுள்ளார்.