2020, 2021 கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டன. சில பெரும் நாடுகளின் பொருளாதாரங்கள் கூட சற்று அதிர்வை கண்டது. இந்த பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கி அடுத்தடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியது. பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்து , அதன் இறக்குமதி குறைந்து விலைவாசி உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயம் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் […]
மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம். மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச இருவரும் வரும் 28-ஆம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு ராஜபக்சக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.