உத்தரப் பிரதேசம் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின் தாதுபூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. பர்தாமன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்த விபத்தால், கங்குலி சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த விபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் விழாவில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் மத்தியில் அவர் உரையாடினார். […]