ஜம்மு- காஸ்மீர் : நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத்துக்கு சொந்தமான ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) வாகனம் குல்மார்க் ஸ்கை ரிசார்ட் அருகே போடாபத்ரியில் உள்ள சௌக் பகுதியில் நின்று கொண்டு இருந்தது. அப்போது,இதனை நோட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் வாகனம் மீது நேற்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூற்றுப்படி, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முகமது ஷாபி மிர் (72) , இவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் கண்ட்முல்லா கிராமத்தில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அவர் மீது […]
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் மேகம் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரை காணவில்லை. ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்கிவாச்சியின் மேல் பகுதியில் மேகம் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய ஐந்து பேரின் குடும்பம் ரஜோரியில் உள்ள கல்சியான் நவ்ஷேராவில் வசித்து வருபவர்கள். இந்த மேக வெடிப்பில் முகமது தாரிக் காரி (8), ஷாஹனாசா பேகம் (30), நாஜியா அக்தர் (14), ஆரிஃப் ஹுசைன் காரி (5) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். […]