ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி,பேட்டிங் கிளமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி தொடக்கத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், துரதிஷ்டவசமாக தொடக்க வீராங்கனையான பௌச்சியர் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் சொற்பரன்களில் […]