19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக இன்று அயர்லாந்து அணியும் வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் சற்று பொறுமையாக விளையாடியது. அயர்லாந்து அணி வீரரான கியான் ஹில்டன் சிறப்பாக விளையாடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதுவே அணியின் ரன்களை உயர்த்த வழிவகுத்தது. […]