பேனர்களை தடுக்க விதிகள் தேவை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக,விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம், பேனர்களை வைத்தபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளது. மேலும்,சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய வழக்கு மற்றும் பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக பதிலளிக்க […]
தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டு இருந்த போது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.அப்போது பின்னே வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது.இதனால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் விழாக்கள் , பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க […]
சென்னையில் பேனர் மேலே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேனர் விவகாரத்தில் தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்.அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? சுபஸ்ரீயை இழந்து நிற்கும் பெற்றோருக்கு அரசு என்ன செய்யப்போகிறது? பேனர் வைத்து அழைத்தால்தான் அரசியல்வாதிகள் வருவார்களா? மேலும் குற்றம் நடக்க […]