கடந்த மாதம் 15-ம் தேதி லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் இருந்து உயிரிழப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இரு நாட்டு படைகளும் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இந்திய- சீனப் […]