குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. […]