சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியில் பாதுகாப்பிற்காக இருந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் வங்கியின் கழிவறைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வங்கிக் கிளைப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.