அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து […]