TMB வங்கி வேலைவாய்ப்பு 2024 : தமிழ்நாட்டில் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) சார்பில், பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 3 வருட காலத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரவிக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பணிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளை படித்துவிட்டு, ஆன்லைன் மூலம் (www.tmbnet.in/tmb_careers/) விண்ணப்பித்துக்கொள்ளலாம். காலியிட விவரங்கள் : பொது மேலாளர் (Treasury) முக்கிய நாட்கள் : விண்ணப்பம் தொடங்கிய தேதி […]
சென்னையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து. சென்னை மின்ட் தெருவில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த காசோலை பண்டல்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
இன்று முதல் 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை. நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பண்டிகைகள் வருவதால் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில், இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி 25.10.2022 – லக்ஷ்மி பூஜை- காங்டாக், ஹைதராபாத், […]
பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகரித்தது. அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது.இதனால்,வாகனங்கள்,வீடு,தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில்,வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில்,வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி:சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை,2.90% முதல் 5.50% வரையும்,மூத்த குடிமக்களுக்கு 3.40% முதல் 6.30% வரையிலான விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி:சாதாரண குடிமக்களுக்கு,2.75% […]
அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ள 2 நாள் பாரத் பந்த் (நாடு தழுவிய வேலைநிறுத்தம்) திங்களன்று வங்கி சேவைகளை பாதித்துள்ளது.நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் […]
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட […]
டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது […]
காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த 40 வயது பெண்மணி வங்கிக்குள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேகலாயாவை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவரை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்மணி வீட்டில் காய்கறி வாங்க சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அவர் சனிக்கிழமை இரவாகியும் வராததால் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால், பெண்மணி காணாமல் போகவில்லை அவர் ஒரு வங்கியில் பணத்தை திருடுவதற்காக வங்கிக்குள் ஒழிந்த நிலையில் இருந்துள்ளார். அந்தப் […]
முகக்கவசம் அணியாததால் ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில், பரேலியில் ராஜேஷ் என்ற ரயில்வே ஊழியர் ஒருவர் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு […]
கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலர் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேர் கொரோனா […]
மே மாதத்தில் புதுடெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் 2021 மே மாதத்தில் வங்கி நடவடிக்கைகள் மூடப்படும் சில நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படுகிறது. இருப்பினும், வெவ்வேறு மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் வேறுபடலாம். இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறைகளை மூன்று விதமாக பிரித்துள்ளது. அவை, பேச்சு […]
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரையில்,கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கி கிளைக்கு 3 நாட்கள் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றில் உங்களிடம் கணக்கு இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஏனெனில் வரும் நாட்களில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று முதல் ஏப்ரல் 4 வரை வங்கிகள் 7 நாட்களுக்கு மூடப்படயுள்ளது. மோசடி எஸ்எம்எஸ் நிறுத்த முயற்சி: தேவையற்ற மற்றும் மோசடி எஸ்எம்எஸ்ஸிலிருந்து விடுபட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் […]
வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என வெளியாகும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை. இதற்கிடையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தகவல் வெளியானது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து வங்கி விளக்கம் அளித்துள்ளது […]
வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், […]
இந்தியாவில் ஜனவரி மாதம் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும், இதில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஒரு தேசிய விடுமுறையும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) படி, இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுக்கப்படுகிறது. கடைசி நிமிடத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கிகள் […]
மகாராஷ்டிராவில் உள்ள காரத் ஜனதா சகாரி வங்கி லிமிடெட் உரிமத்தை போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டாததால் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. வங்கியின் டெபாசிட்டர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) நிறுவனத்திடமிருந்து தங்கள் வைப்புகளை முழுமையாக செலுத்துவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைப்பு நடவடிக்கைகளின் தொடக்கத்துடன், காரத் ஜனதா சகாரி வங்கியின் வைப்புதாரர்களுக்கு […]
டிசம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், வழக்கமான வாங்கி விடுமுறை நாட்களை தவிர்த்து நாடு முழுவதிலும் எப்பொழுதெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கமாக வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அணைத்து ஞ்சயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். இந்த டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலுமுள்ள அரசு மட்டும் அனைத்து தனியார் வங்கிகளுக்கும் வழக்கமான விடுமுறையை தவிர்த்து எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி மாநில பதவியேற்பு நாளை முன்னிட்டு நாகலந்திலும், […]