அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21) முதல் ஏப்.21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in இணையதளம் விண்ணப்பிக்கலாம். MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்பபடவுள்து. அதன்படி, கோவை – 344, மதுரை – 322, கும்பகோணம் 756, சேலம் 486, […]