மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) திடீரென மாரடைப்பால் கடந்த 19-ஆம் தேதி காலமானார். பங்காரு அடிகளார் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து இருந்தனர். இதில், ஆளுநர் தமிழிசை, முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேவேளையில், ஆன்மீக தலைவர்கள் […]