பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் ஏர் கார்கோ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கௌதமாலா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்தப் பெண் 150 கொக்கைன் காப்ஸ்யூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் ஒரு சிறிய டியூபில் அவற்றை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்புடன் வைத்திருந்த பெண்ணின் வயிற்றில் இருந்த அனைத்து காப்ஸ்யூல்களும் பறிமுதல் […]
பெங்களூரில் டி.ஜே.ஹள்ளி என்ற பகுதியில் பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் அம்ஜத் என்பவர், சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த போது பட்டப்பகலில் திடீரென அவரை சுற்றி வளைத்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அம்ஜத் உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த மர்ம கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடுரோட்டில் […]
உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் […]
பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் மோடி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பிரதமர் மோடி பேசுகையில், வான்வெளி ஆராய்ச்சியில் சாதனை புரிந்து வருவது போல் நாம், ஆழ்கடல் […]
உறங்கியபோது அத்துமீறிய 2 பேரை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பேருந்து நிலையத்தில் வயதான பெண் ஒருவர் காலணியால் தாக்கினார். ஹூப்ளியில் தனது கிராமத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை தவறவிட்ட 55 வயது பெண் ஒருவர், பேருந்து நிலையத்திலேயே உறங்கியுள்ளார். அப்போது, அருகில் படுத்திருந்த 2 பேர், அவரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், இருவரையும் தனது காலணியால் தாக்கினார். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் பெங்களூரில் மாநகர காவல் ஆணையர் பள்ளி மாணவருக்கு சல்யூட் அடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. பெங்களூர் காவல் ஆணையரான டி.சுனில்குமார், அங்குள்ள மல்லையா மருத்துவமனையிலிருந்து சக போலீசாருடன் வெளிவருகிறார். அப்போது பள்ளிச்சீருடையில் எதிர்படும் மாணவன் ஒருவன், அவரைப் பார்த்து சல்யூட் அடிக்க, காவல் ஆணையரும் மிடுக்காக சல்யூட் வைக்கிறார். இந்தக் காட்சிகள் பெங்களூர் போலீசாரின் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டன. சிறுவன் என்றும் பாராமல், மாணவன் அளித்த மரியாதைக்கு பதில் மரியாதை வைத்த காவல் ஆணையர் […]