நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விபத்தில் சிக்கி தற்போது உயிரோடு உள்ள ஒரே ராணுவ அதிகாரி கேப்டன் வருண் சிங் 80 சதவிகித காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் […]
ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான […]
பெங்களூருவில் இன்றும் நாளையும் பழுது பார்க்கும் பணி காரணமாக தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் டிரான்ஸ்மிஷன் மெயின் பம்பிங் ஸ்டேஷனில் கசிவுகளைத் தடுப்பதற்கான பழுது பார்க்கும் பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கீழ் உள்ள காவிரி மூன்றாம் கட்டப் பகுதியான டி.கே. ஹள்ளி பகுதியில் தான் அதிகளவில் தண்ணீர் வழங்குவதில் […]
சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக சசிகலா மீது குற்றச்சாட்டப்பட்டியிருந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மித்ரா (Autosomal Recessive Spinal Muscular Atropy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது. சிறுமியின் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் (zolgensma) என்ற ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை ரூ.16 கோடி என்றும் அதனை […]
பெங்களூரில் 45 வயது மருத்துவர் ஒருவர் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார். பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய மருத்துவர் அம்பரிஷ் விஜயராகவன், சைக்காலஜி துறை உதவிப் பேராசிரியராகவும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் பணிக்கு வந்து, சக மருத்துவர்களிடம் சாதாரணமாகவே பேசி சிரித்து இருந்துள்ளார். ஆனால் புதன்கிழமை அன்று இரவு 11.45 மணி அளவில் அவர் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]
கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாட்டில் 4 மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 22 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. […]
இந்தியாவில் இருக்கும் நகரங்களில் தரமான வாழ்க்கைக்கான நகரத்தில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வாழ தகுதி வாய்ந்த நகரங்களை டெல்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ளது. இதன் தரவரிசையில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. மேலும், தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் வாழத்தகுதி வாய்ந்த 10 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை வாழ்க்கை தரம்(35 புள்ளிகள்), பொருளாதார திறன்(15 புள்ளிகள்), நிலைத்தன்மை(20 புள்ளிகள்) மற்றும் மக்களின் […]
பெங்களூரில் குழந்தையை திருடி 16 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் மனநல மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ரஷ்மி சசிகுமார் என்பவர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாக அனுபமா எனும் பெண்மணிக்கும் 16 லட்சத்திற்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அனுபமா என்பவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. ஆனால் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் […]
கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில் நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது. மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் […]
பெங்களூர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவருடன் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூர் நகரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதியுற்றுள்ளார். பல போராட்டத்திற்கு பிறகு இவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்துள்ளது. பின்னர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொண்டு குணமடைந்துள்ளார். குணமடைந்து வீடு திரும்பும் உற்சாகத்தில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இவர்கள் […]
பெங்களூரில் நேற்று முன்தினம் கட்டுமான தொழிலாளி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்ததில் அந்த நபர் துடி துடித்து உயிரிழந்துள்ளார். செல்லப்பிராணிகள் என்றாலே தற்பொழுது அதிக அளவில் அனைவர் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. நாய், பூனை, முயல், அணில் என ஒவ்வொரு சின்ன சின்ன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அவற்றை வெளியில் வாக்கிங் அழைத்துச் செல்வதும் வழக்கம். அதுபோல பெங்களூரில் உள்ள எலகங்கா காவல்சரகத்தில் உள்ள […]
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை என்று கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா நேற்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் பெங்களூரில் இருந்து காணவில்லை. காணாமல் போனவர்களைக் கண்காணிக்குமாறு காவல்துறையினரை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாங்கள் மக்களுக்கு இலவச மருந்துகளை வழங்குகிறோம். இது 90% பாதிப்புகளை கட்டுப்படுத்த […]
பெங்களூரு மருத்துவமனை வார்டு அறைக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரைச் சேர்ந்த சுங்கடகட்டே வயது 61 அஞ்சனா நகரில் வசிப்பவர்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் நோயிலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரிவில்லை மனச்சோர்வின் […]
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா வியாழக்கிழமை இரவு மாநிலத்தின் எட்டு நகரங்களான பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிதர், தும்குரு, உடுப்பி மற்றும் மணிப்பால் ஆகிய இடங்களில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ (இரவு ஊரடங்கு உத்தரவு) விதிக்கப்படும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 20 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் உரையாற்றிய முதலமைச்சர் யெடியூரப்பா, மாநிலத்தின் எட்டு நகரங்களில் ‘கொரோனா ஊரடங்கு […]
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார். வெளிமாநிலத்திலிருந்து பெங்களூருக்குள் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்த்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள், வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ரூ.20 கோடி அடிப்படை விலையில் தொடங்கிய ஏலம், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் […]
வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, […]
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால்,சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் […]
கடந்த 11 நாட்கள் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா செல்லும் காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சசிகலா சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா அறிகுறிகள் குறைந்து, உடல் நிலை இயல்பாக இருப்பதால் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. […]