ஆப்கானிஸ்தானில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்.. ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஹைரதன் ஆயில் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப் நகரின் சாலையோரம் உள்ள ஒரு வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, ஹைரதன் ஆயில் நிறுவன அரசு ஊழியர்களை ஏற்றி கொண்டு பேருந்து அப்பகுதியை கடந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து கடுமையாக சேதமடைந்தது. […]