சீனாவில் தங்கல் படத்தின் முதல் நாள் வசூலை நடிகர் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் மிஞ்சியுள்ளது. பாகிஸ்தானிய சிறுமி இந்தியாவில் தொலைந்துபோனபோது, பல தடைகளைக் கடந்து இந்தியர் ஒருவர் அவரை பாகிஸ்தானில் உள்ள குடும்பத்தில் சேர்க்கும் கதையை மையப்படுத்தியது பஜ்ரங்கி பைஜான். இந்தியாவில் பஜ்ரங்கி பைஜான் வெளியாகி 30 மாதங்களுக்குப் பிறகு சீனாவில் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியாகும் சல்மான்கானின் முதல் படமான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 18 கோடி ரூபாய் வசூலித்து […]