டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர். வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது […]
டெல்லி : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் […]
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் […]
டெல்லி : இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர் , வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும், நேரில் அழைத்தும் பாராட்டுவது வழக்கமான ஒன்று. அதே போல, தற்போது நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று கேள்விகளும் எழுந்துள்ளது. தற்போது பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளனர். […]
வெண்கலத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரரை பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தியா வீரர் பஜ்ரங் புனியா ஆடவா் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில் நேற்று களம் கண்டாா்.காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரா் மோர்டஸாவை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அரையிறுதி போட்டியில் […]
இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியா மோதவுள்ளார். இந்தியா வீரர் பஜ்ரங் புனியா நேற்று காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா வீரர் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் […]
ஒலிம்பிக் மல்யுத்தில் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார். இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இருப்பினும் முதல் ரவுண்டிலேயே 3 புள்ளிகளை பஜ்ரங் புனியா பெற்றதால், காலிறுதிக்கு தகுதி பெற்றார். பின்னர், இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் […]
ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா,கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார்.சிறப்பாக பஜ்ரங் விளையாடினார்.இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.இருப்பினும் முதல் ரவுண்டிலேயே முதல் மற்றும் மேலும் 2 புள்ளிகளை அவர் பெற்றதால்,போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். #TeamIndia […]
கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீரர் கால்இறுதியில் கொரியா வீரர் ஜோங் சோல் சன் வீழ்த்தி அரைஇறுதிக்கு சென்றார். அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோ உடன் மோதினார். 9-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். பின்னர் கடைசி நேரத்தில் பஜ்ரங் பூனியா 2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே வீழ்த்தி 9-9 என்ற கணக்கில் சமனில் […]
விளையாட்டு துறையில் உயரிய விருதாக இந்திய அரசால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்துக்கான விருதுக்கான பரிசீலனை இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்றது. அந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.