14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமின் ‘தோனி’ ஆட்டத்தால் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியில் களமிறங்கிய முஷ்பிகுர், 150 பந்துகளை சந்தித்து 144 ரன்கள் விளாசினார். இதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை […]