இங்கிலாந்தில் நடைபெற்ற ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான “Oppenheimer” திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. இதனிடையே, சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. மார்ச் 10ம் […]