14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல் 225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்ணி சேனா உள்ளிட்ட அமைப்புகள் திரையரங்குகளை அடித்து நொறுக்கின. இந்நிலையில் கடும் போராட்டங்கள் மக்களின் ஆர்வத்தை தூண்டியதையடுத்து படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் படம் […]