நீலகிரி:ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது.இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி,இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய […]