பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கும் தொற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள அமைச்சர், […]