பெங்களூரு : கனமழை எதிரொலியாக பாபுசபால்யாவில் கட்டுமானத்தில் இருந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த […]