மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 1992ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 1993ஆம் ஆண்டு மும்பையிலும் கலவரம் நிகழ்ந்தது. அப்போது கலவரத்தில் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி இருந்தவர் சையது நாதிர் ஷா அப்பாஸ் கான். இவர் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு […]
வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதிக்கு பதிலாக 7-ம் தேதி நிறைவு பெறும் என அறிவிப்பு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரை டிச.6ம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் […]
லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று அறிவிக்கவுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் […]
பாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்போது நடத்த கலவரத்தில் 2,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, அப்போது இருந்த உத்தர பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த […]
அயோத்தி நகரம் இராமர் பிறந்த இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.1528-ம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது. அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் , இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. பாரதிய […]
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் 2 . 7 ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு சமமாக பிரித்துக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று முதல் விசாரணையை ஆரம்பித்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாபர் மசூதி வழக்கை 5 […]