கமல்ஹாசனின் மெகா ஹிட் படமான பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது. கடந்த 2013ல் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரிஷ்யம். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 75 கோடி வரை வசூல் செய்தது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியை கண்டது. தமிழில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடித்து பாபநாசம் என்ற பெயரில் […]
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சித்திரை விசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பாபநாசத்தில் பாபநாசர் உடனுறை உலகாம்பிகை கோவில் சித்திரைவிசு திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படும் சிவசைலநாதர் திருக்கோவில் சித்திரைவிசு தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க விமரிசையாக நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்