Supreme Court: பதஞ்சலி விளம்பரம் விவகாரத்தில் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம். பதஞ்சலி நிறுவனம் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக அந்நிறுவனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, கொரோனா காலத்தில் அலோபதி மருத்துவ முறையை தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், பதஞ்சலியின் தவறான […]
Baba Ramdev : பதஞ்சலி மருந்துகள் குறித்து பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. பாபா ராமதேவின் பதஞ்சலி நிறுவனமானது கொரோனா காலத்தில், தங்கள் தரப்பு மருந்துகளை அலோபதி மருந்துகளுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்து இருந்தது. அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என கூறி நீதிமன்றம் விளம்பரங்களுக்கு தடை செய்து இருந்தது. நீதிமன்ற தடையையும் மீறி பதஞ்சலி நிறுவனம் தாங்கள் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளுக்கு விளம்பரங்களை பதிவு செய்து வந்தனர். தடையை மீறி பதஞ்சலி நிறுவனம் […]
மஹாராஷ்டிராவில், ‘ பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என பாபா ராமதேவ் கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தானேயில் நடத்தப்பட்டது . இதில் பதஞ்சலி தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமைவகித்தார். மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி […]
இந்திய மருத்துவ சங்கங்கள் (ஐ.எம்.ஏ) தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்களில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரிய பாபா ராம்தேவ் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் […]
அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு,பாபா ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது. அதில் […]
நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவை கண்டித்து,அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்துள்ளனர். பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.ராம்தேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.பின்னர், […]
அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட,அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.இதனையடுத்து,பாபாராம்தேவ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு இந்திய மருத்துவக் […]
அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார். அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் […]
வேளான் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசிடம் யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தினார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 80-க்கும் மேற்பட்ட நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். […]
இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு எந்தொரு நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு […]
கொரோனாவுக்கு கொரோனில் மருந்தை அறிமுகப்படுத்தியதில் யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நேற்று எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீத்தில் பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின், கொரோனா வைரஸ் நோய்க்காக தயாரிக்கப்பட்ட “Coronil” மருந்தை ரூ.545 க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், அஸ்வகந்தா, […]
பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறதா நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத […]
கொரோனில் சோதனைகளை அனுமதியின்றி செய்த பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா வலியுறுத்தி உள்ளார். பதாஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. தற்போது இந்த மருந்து சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக சிறப்பாக நடைபெற்று தேர்தல் முடிவுகளும் வெளியாகிவுள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாகவும் இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனராகவும், யோகா குருவாகவும் பாபா ராம்தேவ் இருந்து வருகிறார்.இவர் சர்சைக்கு பெயர் போகும் வகையில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.அதனால் பலரின் எதிர்ப்பையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை […]
தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்தது. இந்நிலையில் இதுபற்றி பதஞ்சலி பாபா ராம்தேவ் கூறுகையில் , இதுவரை வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதில் துறவிகள் யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சிவக்குமார சுவாமி […]
நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் பாபா ராம்தேவ் வியாபாரம் செய்கின்ற பதஞ்சலி பாட்டிலில் மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்டாலும் ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். அப்பட்டமான மோசடி. தயாரிப்பு தேதியில் நம்பகத் தன்மை இல்லையென்றால் இது போன வருடம் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆகவே யார் எந்த பொருள்களை வாங்கினாலும் சோதித்து பார்த்து வாங்கவும்.
யோகா குருவான பாபா ராம்தேவ், பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன. இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.பின்னர் இது அவரது அரசியல் பலத்தை கொண்டு சரி செய்யப்பட்டது. நிலம் ஏலம் எடுத்ததில் ரூபாய் 300 கோடி டிஸ்கவுண்ட். இவருடைய […]
சந்தன மரம் வெட்டுவது இந்தியா முழுவதுமே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு 50 டன் சந்தன மரக்கட்டை எப்படி கிடைத்தது..? என்பது குறித்து நரேந்திர மோடி அரசு ஏன் விசாரணை செய்யவில்லை..? பிரதமர் மோடியின் துணையோடு சாமியார்கள் பித்தலாட்டங்களை தொடர்கிறார்கள்.