சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடந்து வரும், விஜய் ஹசாரே 2022 கோப்பையின் போட்டியில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். […]