பெங்களூருவில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட 301 மத வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி ஒலி அளவு குறித்த விதிகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்தார். இந்நிலையில் மசூதிகளில் ஆசானுக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நீதிமன்றத்தின் ஒலி மாசுபாட்டை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு போலீஸார் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.