சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் […]
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் கடவுள் சபரிமலை என்ற திருத்தளத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஐயப்பன். தண்ட காருண்ய வனத்து மகரிஷியின் ஆணவத்தை குறைக்க ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர். பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கக் கூடிய இந்த தெய்வம் சின் முத்திரையுடன் யோக பட்டை அணிந்து காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நாம் என்ன பிரார்த்தனை செய்கிறோமோ அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம். முறையான விரத நாட்கள் முந்தைய காலகட்டத்தில், தை மகர ஜோதிக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து […]
கடந்த 39 நாட்களில் 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளா, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு ஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர். இன்று நடை திறந்து 41வது நாள் ஒரு மண்டலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு மண்டல பூஜை மதியம் 12.30 மணியளவில் தொடங்க உள்ளது. நடை திறந்து 39 நாள் வருமானத்தை நேற்று சபரிமலை […]
சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்கதர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (நவம்பர் 17) சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து 41வது நாள் மண்டல பூஜை நடைபெறும். வெகு விமர்சியாக நடைபெறும் இந்த மண்டல பூஜையை காண பக்தர்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள். இதில், […]
கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்து விடுவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கு பலவித மகதத்துவம் உள்ளது. கார்த்திகை மாதம் துவங்கிய முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலை செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். அப்படி தொடங்கி சபரிமலை கோவிலுக்கு சென்றவுடன் 18 படிகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க […]
ஒவ்வொரு திருத்தலங்களிலும் தலவரலாறு, தல விருட்சம், நெய்வேத்தியம் என மாறுபட்டதாக இருக்கும். இந்த மாதத்தின் கதாநாயனான சபரிமலை சாஸ்தாவுக்கான நெய்வேத்தியம் குறித்த தகவகள் உங்களுக்காக. அதிக அளவில் விரதமிருந்து பய பக்தியோடு செல்லும் திருத்தலங்களில் முதன்மையானது சபரிமலை ஆகும். இந்த திருத்தலத்தில் குடிகொண்ட கன்னிச்சாமியான ஐயப்பனுக்கு அதிகாலையில் எட்டு திரவிய அபிசேகத்திற்கு பிறகு,முதல் நெய்வேத்தியமாக, கதலி பழம், தேன், சர்க்கரையால் செய்யப்பட்ட திருமதுரம் ஆகியவை அளிக்கப்படுகிறது. பின் நெய் அபிஷேகம் முடிந்து உச்சிகால பூஜையின் போது, கதலிப்பழம், […]