சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, அடுத்த நாளான நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் (ஒரு மண்டலம்) கழித்து கடந்த டிசம்பர் 27, மார்கழி மாதம் 11ஆம் தேதி அன்று மண்டல பூஜைவிழா கோலாகலமாக நடைபெற்றது. வழக்கத்தை விட இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. […]
வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய முழுவதும் பல்வேறு பிரபல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பிரபல கோவில்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோவில் நிர்வாகம் திணறி வருகிறதாம். இதனை கருத்தில் கொண்டு, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஓர் முக்கிய தகவலை […]
மார்கழி மாதம் தொடங்கிவிட்டது மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டு கொண்டு இருகின்றனர். மண்டல பூஜை நிறைவுற்றதும், பெருவழி பாதையில் ஐயப்ப தரிசனத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருகின்றனர். மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15–ந்தேதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்தனர். மண்டல பூஜை கடந்த 26–ந்தேதியுடன் நிறைவு பெற்றது. அன்று இரவு 11 மணிக்கு […]
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. அயப்ப பக்தர்களும் தங்கள் விரதங்களை தொடங்கிவிட்டனர். இனி வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். சம்பரிமலை செல்வதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் சபரிமலை கேரளாவில் உள்ளதால் கோவிலை பற்றி முழுதாக சிலருக்கு தெரியவதில்லை. அவர்களுக்கு தெரியும் விதமாக சில விபரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். தமிழ்கடவுள் முருகனுக்கு அறுபடைவீடுகள் உண்டு அது போல, சபரிமலை ஐயப்பனுக்கும் வீடுகள் உண்டு. அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகிய ஐந்து தலங்கள்தான் […]