ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.