அயோத்தி: ராமர் கோயிலுக்கு 1,100 கிலோ எடையுள்ள வில், அம்பு மற்றும் தண்டாயுதம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் உத்திர பிரதேசம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இருந்தே கடவுள் ராமருக்கு பல்வேறு பகுதியில் இருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ராமர் கோயில் திறப்பு நிகழ்வு சமயத்தில் 2.5 கிலோ எடையில் தங்கத்தில் வில் அம்பு பரிசாக வழங்கப்பட்டது., ஆந்திராவில் இருந்து வெள்ளியிலான 13 கிலோ எடையுள்ள […]
அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம். இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று […]
அயோத்தியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் புதிய மசூதி கட்ட இடம் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தற்பொழுது பெரிய அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து நாளை அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட […]
30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட அயோத்தி கோயில் கட்டுமானம் தொடர்பான திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 11 பேர் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது. இதனிடையே அயோத்தி […]
இந்தியாவே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வழக்காக உள்ளது அயோத்தி வழக்கு. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பானது வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். ஆதலால் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளார். தீர்ப்பு வெளியாகும் நாளில் அசம்பாவிதம் எதுவும் நடைபெற கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாம். […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக […]
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து சம்பத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை பிரித்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட இப்ராஹிம் லலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை அமைத்து அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த சமரச குழு மீது நம்பிக்கை இல்லை அந்த குழு மந்தமாக செயல்படுகிறது […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராடக்கூடும் என்பதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் உத்தரபிரதேச மாநில அயோத்தியில் தர்மசபா கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இதில் பங்கேற்பதற்காக வட மாநிலங்களில் இருந்து விஷ்வ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா தொண்டர்கள் என அனைவரும் அங்கு ஒன்று […]
அயோத்தி பிரதான வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.இந்த வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், […]
இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள் எனவே அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும்” – பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் . இதுவரை கேள்விப்படாத திடுக்கிடும் உண்மையா இருக்கே. அது சரி, அவர்கள் ராமனின் வழித் தோன்றல்கள் என்றால் உங்களது கட்சியின் தலைவர்கள் ஏன்அவ்வப்போது அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..?