அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சில இஸ்லாமிய அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் எனஉத்தரவு விட்டது. மேலும் இஸ்லாமியர்களுக்கு மசூதி […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் நாசீருக்கும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சுமூகமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியான […]
அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் எனவும் அதில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் கொடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட ஏற்பாடுகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொடுத்த வரைபடத்தின் படி ராமர் கோவில் கட்டமைக்கப்பட்ட உள்ளது. கட்டப்படும் கோவிலின் உயரம் […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சன்னி வக்ஃபு வாரிய அமைப்பிற்கு 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் […]
அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அயோத்தி தீர்ப்பு குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. பாபர் […]
அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அயோத்தி தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் அயோத்தியில் கோயில் கட்ட அனுமதி அளித்தது. இந்த நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் .உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது. தீர்ப்பை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று […]
உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன்.அனைவரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பு வெளியான நிலையில்,நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது .என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த […]
அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். सुप्रीम कोर्ट ने अयोध्या मुद्दे पर अपना फैसला सुना दिया है। कोर्ट के इस फैसले का सम्मान करते हुए हम सब को आपसी सद्भाव बनाए रखना है। ये वक्त हम सभी भारतीयों के बीच बन्धुत्व,विश्वास […]
நிலம் கொண்டாடுவதில் பிரச்சினை : உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு : நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு : இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த […]
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தனர். அதில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இதோ! மீர்பாகி என்பவரால் பாபர் கோவில் கட்டப்பட்டது. . காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது. […]
அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் உலக அளவில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.அதன்படி,#AYODHYAVERDICT என்ற ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து #RamMandir, #AyodhyaJudgment, #JaiShriRam #BabriMasjid என்ற ஹேஷ் டேக்குகள் 2-வது , 3-வது,4-வது மற்றும் 5-வது இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்பான ராமஜென்ம அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்பான சன்னி வக்ஃபு வாரிய அமைப்பிற்கு 3 மாதங்களுக்குள் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வாசித்து வருகின்றனர். அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. எனவும், மேலும், அங்கு அந்த இடத்தில ஒரு கட்டிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை தரவுகள் தெரிவிப்பதாவும் தீர்ப்பில் வாசிக்கப்பட்டு வருகின்றனர்.
அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளிக்கும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். இதில்,அயோத்தி நிலத்தை உரிமை கோரிய ஷியா பிரிவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கியமான இடங்களில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், சாதி,மத பூசல்கள் இன்றி அனைத்து […]
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகள்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ,அந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல ,தோல்வியும் அல்ல.தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க […]
நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிறது உச்சநீதிமன்றம். அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்,அயோத்தி வழக்கில் 40 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த பின்பு அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் […]
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளள்து. அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள்.முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.