அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் பங்கேற்று பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன்பின், முதலாவது பூஜையாக தேங்காய் மற்றும் பழங்கள் வைத்து தீபராதனை காட்டி ஸ்ரீ ராம பகவானை பிரதமர் மோடி வழிபட்டார். பிரதமரை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ராமரை வழிபட்டனர். இதன்பின் குழந்தை ராமருக்கு பல்வேறு […]
பெரும் சர்ச்சைக்கும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 தளங்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மற்றும் மக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு கோயில் கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார். இந்த பூஜையில், […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் […]
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்காக டன் கணக்கில் பூக்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை முதல் பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. கோயில் திறப்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் […]
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர். கடந்த 16ம் தேதி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கிய நிலையில், திறப்பு விழா வரை இந்த பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை […]
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாளுக்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இதன்பின் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான […]