ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அரைநாள் விடுமுறையை வாபஸ் பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (ஜன.22-ம் தேதி) உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு அரை நாள் […]