விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய அணி வீரர்களுடன் பயிற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில், சில அணிகளில் கேப்டன்கள் யார் என்று அறிவிக்கப்பட்டாலும் சில அணிகளில் யார் இந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்துவார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி அணியை இந்த முறை யார் வழிநடத்தபோகிறார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. இருப்பினும், தற்போது டெல்லி அணியில் இருக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய நிலையில், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பணியில் ஐபிஎல் வட்டாரங்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில், ஒரு சில அணிகளுக்கு முரண்பாடு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டெல்லி அணியின் தற்போதைய கேப்டனான […]
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும், நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகித்து விளையாடி வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியளரான கவுதம் கம்பீர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். மேலும், அங்கு பல விஷயங்களை பகிர்ந்த […]
உலகக்கோப்பை 2024 டி20 : தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது […]
டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது, இந்த தொடரில் விராட் கோலி ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை அதே போல இந்த போட்டியிலும் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசஅணி 272/6 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் […]
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் […]
ஐபிஎல் தோடன்றில் டெல்லி அணி சார்பாக விளையாடும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர் குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர், அக்சர் படேல். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில்,அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். […]
டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி அணி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே […]
இந்தியா ஆல்ரவுண்டர் அக்சர் படேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது. அவரை பி.சி.சி.ஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது, அவரது விரிவான அறிக்கைகள் காத்திருக்கின்றோம் என்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளது.27 வயதான அக்சர் படேல் அவர் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது தனது இடது முழங்காலில் வலி இருப்பதாக கூறியிருந்தார்.